Recent Post

திருமணத்துக்கு தயாராகும் நடிகை அனுஷ்கா



திருமணத்துக்கு தயாராகும் நடிகை அனுஷ்கா
நடிகை அனுஷ்கா திருமணத்துக்கு தயாராகிறார். 2005–ல் சூப்பர் தெலுங்கு படம் மூலம் சினிமாவுக்கு வந்தார். அதன் பிறகு ஏராளமான படங்கள் குவிந்தது. அங்கு முன்னணி நடிகையானார். அருந்ததி படம் மூலம் தமிழிலும் பிரபலமானார். விஜய், விக்ரம், அஜித், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.

தற்போது ‘ருத்ரமாதேவி’, பாகுபலி என இரு புராண மற்றும் வரலாற்று படங்களில் நடிக்கிறார். இதற்கு பிறகு புது படங்கள் எதிலும் ஒப்பந்தமாக வில்லை. அனுஷ்காவுக்கு 32 வயது ஆகிறது. விரைவில் அவருக்கு திருமணத்தை முடிக்க குடும்பத்தினர் அவசரம் காட்டுகிறார்கள். மாப்பிள்ளை பார்க்கும் படலமும் நடக்கிறது.

எனவே விரைவில் திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட திட்ட மிட்டுள்ளார். சினிமாவில் இருந்து விடைபெறுவதை சமீபத்திய பேட்டியொன்றில் மறைமுகமாக அவர் தெரிவித்தார். அனுஷ்கா கூறும் போது சூப்பர் படத்தில் நடிக்க நாகார்ஜுனா எனக்கு வாய்ப்பு அளிக்காமல் இருந்திருந்தால் கதாநாயகியாகி இருக்க முடியாது. தொடர்ந்து நடித்த பல படங்கள் என்னை முன்னணி நடிகையாக உயர்த்தியது. அருந்ததி படத்தில் நடித்ததன் மூலம் என் கனவு நிறைவேறியது. மீண்டும் அதுமாதிரி வேடங்கள் அமையும் என நான் நினைக்கவில்லை.

ராணி ருத்ரமாதேவி படம் எனக்கு மிகுந்த திருப்தி அளித்துள்ளது. இதை யெல்லாம் மறக்க முடியாது எப்போதும் என் ஞாபகத்தில் வைத்து இருப்பேன். என்றார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)