
சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சதீஷ், சூரி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘மான் கராத்தே’.
இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய திருக்குமரன் இயக்கியிருக்கிறார். படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். படத்தினை ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சுகுமார். இப்படத்திற்கு கதை எழுதி எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இப்படத்தின் பாடல்களும் டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படம் வரும் 4ம் தேதி அதாவது வெள்ளியன்று உலகம் முழுவதும் 625 திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இதில் ‘மான் கராத்தே’ சென்னையில் மட்டும் 25 திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழகமெங்கும் 345 திரையரங்குகளுக்கும் வெளிநாட்டில் 180 திரையரங்குகளிலும், தமிழகத்தை தவித்து மற்ற மாநிலங்களில் 150 திரையரங்குகளிலும் ஆக மொத்தம் 675 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ போன்ற படங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த சிவகார்த்திகேயனின் இப்படத்தையும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.