
நடிகை தமன்னா ஒரு பாடலுக்கு நடனமாடவிருக்கிறார். தெலுங்கில் பிரபல இயக்குனர் வி.வி.விநாயக் ஸ்ரீனிவாஸை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்தப் படத்தில்தான் நடிகை தமன்னா ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். அதுவும் ஐட்டம் டான்ஸ் இல்லையாம். படத்தின் ஹீரோ ஸ்ரீனிவாஸுடன் சேர்ந்து ஆடும் ரொமாண்டிக் டான்ஸ் தான். ஐதராபாத் அருகே செட் அமைத்து இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வரும் தமன்னா இந்த சமயத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட சம்மதித்திருக்கிறார். இதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். அது தமன்னாவிற்கு நிறையவே இருக்கிறது. முதலில் இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில்தான் தமன்னா நடிக்கவிருந்தாராம். ஆனால் பின்னர் கதையை மாற்றிய இயக்குனர் படத்தில் இடம்பெறும் முக்கியமான பாடலுக்கு மட்டும் நடனமாடினால் போதும் என்று சொல்லிவிட்டாராம்.
பிறகு வேறுவழியின்றி கதையின் முக்கியம் கருதி தமன்னாவும் ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொண்டாராம். தற்போது தமன்னா தெலுங்கில் மகேஷ்பாபுவின் ஜோடியாக ‘ஆகடு’ படத்திலும், பிரபாஸுக்கு ஜோடியாக ‘பாஹுபலி’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.