Recent Post

வித்தியாசமான தோற்றத்தில் சிம்பு!




அவ்வப்போது கிசுகிசுவில் சிக்குபவர் சிம்பு. ஆனால் சமீப நாட்களாக சிம்பு பற்றி எந்தவித செய்திகளும் மீடியாக்களில் வருவதில்லை.
என்னவென்று விசாரித்ததில் இப்போது அவர் தன்னுடைய முழுகவனத்தையும் படங்களில் செலுத்த துவங்கிவிட்டாராம். அதனால இதுவரை தான் கமிட்டான ஒவ்வொரு படங்களையும் முடிப்பதில் தீவிரகாட்டி வருகிறாராம். தற்போது சிம்பு பாண்டிராஜ் இயக்கும் இது நம்ம ஆளு படத்திலும், கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்திலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதில் கௌதம் மேனன் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 சதவிகிதத்திற்கும் மேல் முடிவடைந்துவிட்டதாம். இன்னும் ஒருசில காட்சிகளும், ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கியாம். கௌதம் மேனன் அடுத்ததாக அஜித் படத்தை இயக்கவிருப்பதால் சிம்பு தனது சொந்த தயாரிப்பான இது நம்ம ஆளு படப்பிடிப்பைகூட தள்ளி வைத்து விட்டு கெளதம் படத்திற்கு அதிக கால்சீட் கொடுத்து நடித்துக்கொண்டிருககிறார்.
இவைதவிர சிம்பு அடுத்ததாக செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்திற்காக அவர் புதுவிதமான கெட்அப் ஒன்றில் தோன்றவிருக்கிறாராம். கெட்டப் மாற்றினால் வேறு படங்களில் நடிக்க முடியாது என்பதால், அதற்கு முன்னதாகவே கௌதம்மேனன், இது நம்ம ஆளு படப்பிடிப்பை முடித்துக்கொடுக்கும் திட்டதில் இருக்கிறார் சிம்பு.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)