Recent Post

ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய விழாவில் திரிஷா பங்கேற்பு?



கனடாவில் ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய விழாவில் நடிகை திரிஷா பங்கேற்றதாக தமிழ் அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
இலங்கை கடந்த 2009 ஆண்டு நடந்த போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து  இலங்கைக்கு செல்ல கூடாது என தமிழ்திரை உலகத்தினர் முடிவு செய்தனர். இதே போன்று அங்கு நடக்கும் எந்த விழாக்களிலும் பங்கேற்கமால் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். அதேபோல்  வெளிநாடுகளில் ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்தும் விழாக்களை தமிழ் திரையுலகினர் புறக்கணித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை திரிஷா தடையை மீறி ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய விழாவில் பங்கேற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கனடாவில் நடைபெற்ற இந்த விழாவை அங்குள்ள தமிழ் அமைப்பு ஒன்று நடத்தியதாகவும், அந்த அமைப்பில் உள்ளவர்கள் ராஜபக்சேவுக்கு நெருக்கமுள்ள டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள் என்றும் சில தமிழர் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.. இந்த விழாவில் திரிஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்று உள்ளதாக கூறிய அந்த அமைப்புகள் , அவரை கண்டித்துள்ளன.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)