Recent Post

இன்னார்க்கு இன்னாரென்று




நாயகன் சினி ஆர்ட்ஸ் எஸ்.நாயகம் ஏழுமலையான் மூவிசுடன் இணைந்து தயாரிக்கும் படம் இன்னார்க்கு இன்னாரென்று.

இதில் கதையின் நாயகனாக புதுமுகம் சிலம்பரசன், நாயகிகளாக மலேசிய ஸ்டெலி, அஞ்சனா நடிக்கின்றனர். சந்தானபாரதி, விஜய்கிருஷ்ணராஜ், அனுமோகன், ஆர்.என்.ஆர்., மனோகர் ஆகிய நான்கு இயக்குனர்கள் முக்கிய கேரக்டரில் வருகின்றனர்.

நெல்லை சிவா, அல்வா வாசு ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆண்டாள் ரமேஷ் இயக்குகிறார்.

வளர்ந்து வரும் நாகரீக மோகத்தில் சிக்கி சீரழியும் தமிழ் பண்பாட்டை காப்பாற்றும் முயற்சியாக காதலை கண்ணியமாகவும் பெண்களை பெற்ற பெற்றோர் கோணத்தில் அவர்களின் பொறுப்பையும் தவிப்பையும் உணர்ச்சிகரமாக சொல்லி இருக்கிறோம் என்றார் இயக்குனர். காமெடியும் விறுவிறுப்பும் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

கேட்டுக்க நண்பா கேட்டுக்க என்ற பாடல் குடிப்பழக்கத்தின் தீமையை விளக்கும் வகையில் படமாக்கப்பட்டு உள்ளது. இந்த பாடலை இயக்குனர் அண்டாள் ரமேஷ் எழுதி நடித்தும் உள்ளார். தணிக்கை குழுவினர் படம் பார்த்து யு சான்றிதழ் அளித்துள்ளனர்.


Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)