Recent Post

மீண்டும் கைகோர்க்கும் ‘எங்கேயும் எப்போதும்’ கூட்டணி



‘எங்கேயும் எப்போதும்’ படத்தை அடுத்து இரண்டாவது முறையாக ஜெய்யுடன் கைகோர்க்கிறார் சரவணன்.
இந்த முறை இருவரும் இணைந்து அதிரடி ஆக்ஷ்ன் கலந்த காதல் கதையை கொடுக்க இருக்கிறார்கள். படத்திற்காக ஜெய்யின் தோற்றத்தில் நிறைய மாற்றம் இருக்கப் போகிறதாம். அதேசமயம் படத்தில் காதலுக்கு அதிக முக்கியத்துவமும் உண்டாம்.
சரவணனின் முந்தைய இரண்டு படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் சி.சத்யா. ஆனால் அவர் இந்தப் படத்திற்கு கிடையாதாம். அவருக்குப் பதிலாக டி.இமானை ஒப்பந்தம் செய்து இருக்கிறார் சரவணன். ‘சூதுகவ்வும்’ படத்தின் ஒளிப்பதிவாளரான தினேஷ் கிருஷ்ணன் தான் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.
பெயரிடப்படாத இப்படத்தின் அதிகாரபூர்வமான தகவல்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். தற்போது படத்திற்கான ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. அது முடிந்ததும் இந்த மாதத்திலேயே படப்பிடிப்பை துவங்க இருக்கிறார் சரவணன்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)