
விஷால் அரசியலில் ஈடுபடப் போவதாக சமீபத்தில் செய்திகள் வந்தது. ஒரு கட்சியில் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்யப்போவதாகவும் கூறப்பட்டது. ஏற்கனவே நடிகர்–நடிகைகள் பலர் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். சமந்தா பாரதீய ஜனதா தலைவர் நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
விஷாலின் 'நான் சிகப்பு மனிதன்' படம் வருகிற 11–ந்தேதி ரிலீசாகிறது. அதன்பிறகு விஷாலின் அரசியல் பிரவேசம் இருக்கும் என கூறப்பட்டது. இதற்கு விஷால் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–
நான் அரசியலில் ஈடுபடப்போவதாக வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை. எனக்கு அரசியலில் ஆர்வம் கிடையாது. எனவே அரசியலுக்கு வரமாட்டேன். அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பிரசாரமும் செய்யமாட்டேன். தேர்தலில் நல்ல வேட்பாளருக்கு ஓட்டு போடுவேன்.
தெலுங்கில் நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன். திருமணம் எப்போது என்ற கேள்விக்கு என்னால் பதில் சொல்ல இயலாது.
இவ்வாறு விஷால் கூறினார்.