
வீரம் வெற்றியை தொடர்ந்து அஜீத் அடுத்து கௌதம் மேனன் படத்தில் நடிக்கிறார் என்பது நமக்கு தெரிந்ததே. இந்த படத்தை அடுத்து அஜீத் மீண்டும் வீரம் சிவாவுக்கே கால்ஷீட் கொடுப்பார் என்றும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிப்பார் என்றும் பேசப்பட்டு வந்தது.ஆனால் தற்போது அது உண்மையில்லையாம். ஷங்கர் இயக்கத்தில் அஜீத் நடிக்கவுள்ளார் என்பதே உண்மை. ஐ படத்தை அடுத்து ஷங்கர் ரஜினியை வைத்து இயக்குவதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்ற செய்தி உறுதியானதும் ஷங்கரின் அடுத்த படம் யாருடன் என கேள்வி எழுந்தது. இதனிடையே அஜீத்திடம் 4 வரியில் ஒரு கதையினை கூறினாராம் ஷங்கர். அதனை கேட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் அஜீத் நடிக்க ஒப்புகொண்டாராம். இதில் முக்கிய விஷயம் என்ன வென்றால் அதில் அஜீத் இரட்டை வேடம் ஏற்கிறார். நாயகியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளார்.