Recent Post

பூஜை




விஷாலின் நான் சிகப்பு மனிதன் படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 11-ந்தேதி ரிலீசாகிறது. இப்படத்துக்கு பின் விஷால் நடிக்கும் புதிய படத்துக்கு பூஜை என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை விஷாலே தனது விஷால் பிலிம்பேக்டரி பட நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

இதில் நாயகியாக சுருதிஹாசன் நடிக்கிறார். சத்யராஜ், ராதிகா, சூரி, முகேஷ் திவாரி, ஜெயபிரகாஷ், தலைவாசல் விஜய், ஆர்.சுந்தர்ராஜன் அபிநயகா, சித்தாரா, கௌசல்யா, ரேணுகா, ஐஸ்வர்யா, ஜானகி சபேஷ், மனோபாலா, சந்தானபாரதி, கராத்தே ராஜா, பிளாக்பாண்டி போன்றோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹரி இயக்குகிறார். ஏற்கனவே விஷால் ஹரி கூட்டணியில் தாமிரபரணி படம் வந்தது. மீண்டும் இப்படத்தில் இணைகின்றனர். ஆக்ஷன் படமாக தயாராகிறது.

படப்பிடிப்பு சென்னை, கோவை, காரைக்குடி, நெல்லை பகுதிகளில் நடக்கிறது.

இசை: யுவன்ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு: ப்ரியன், எடிட்டிங்: வி.டி.விஜயன், டி.எஸ்.ஜெய், ஸ்டண்ட்: கனல் கண்ணன், பாடல்: நா.முத்துக்குமார், நடனம்:பிருந்தா, தினேஷ், பாபா பாஸ்கர்.


Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)