Recent Post

கடவுள் பாதி மிருகம் பாதி




செலிப்ஸ் அண்ட் ரெட் கார்பட் நிறுவனம் சார்பில் ராஜ் தயாரித்து இயக்கும் படத்துக்கு கடவுள் பாதி மிருகம் பாதி என பெயரிடப்பட்டு உள்ளது. இதில் ராஜ் முக்கிய கேரக்டரிலும் நடிக்கிறார். அபிஷேக் இளம் காதலனாக வருகிறார். இவர் ஆர்யா தயாரிக்கும் படித்துறை படத்தின் நாயகன். மலையாளத்திலும் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்வேதா விஜய் நடிக்கிறார்.

சஸ்பென்ஸ், திகில், காதல், ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக தயாராகிறது.

உறவு, பகை, குடும்பம், துன்பம் இணைந்தே இருப்பவை. அதுபோல் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நல்ல குணமும் கெட்ட குணமும் இணைந்து இருக்கின்றது. சூழலுக்கு ஏற்ப அந்த குணம் வெளியே தெரிகிறது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள இந்த நல்லவன் கெட்டவனில் எவன் எப்போது வருவான் என்பது யாருக்கும் தெரியாது. இந்த கருத்தை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது.

சென்னை, ஹைதராபாத், பழைய நெடுஞ்சாலையில் நடக்கும் கதை. நெடுஞ்சாலையில் பயணிக்கும் சில முக்கிய கேரக்டர்கள் அவை சந்திக்கும் சம்பவங்கள் பரபரப்பாக இருக்கும் என்றும் டைரக்டர் கூறினார். மைனா சேதுவும் முக்கிய கேரக்டரில் வருகிறார்.

ஒளிப்பதிவு: கிஷோர்மணி, இசை: ராகுல்ராஜ், பாடல்: கருணாகரன்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)