Recent Post

சரித்திர கதையில் ரஜினி: கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்



சரித்திர கதையில் ரஜினி: கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்ரஜினியின் கோச்சடையான் மே மாதம் ரிலீசாகிறது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி நடிக்கும் புது படம் என்ன? டைரக்டர் யார் என்பது பற்றி அறிய ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு நிலவியது. தற்போது ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது ரடரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சரித்திர கதையம்சம் உள்ள படம் என்றும் கூறப்படுகிறது. ரஜினிக்கு வரலாற்று கதைகளில் நடிக்க அதிக பிரியம் கோச்சடையான் பட விழாவில் சமீபத்தில் இதனை தெரிவித்தார்.

சிறு வயதில் ஒரு ஊர்ல ராஜாராணி இருந்தார் என்று தொடங்கும் கதைகளை ஆர்வமுடன் படிப்பேன். சரித்திர படங்களில் நடிக்க எனக்கு ஆர்வம் உண்டு என்றார். கோச்சடையான் அனிமேஷன் படம் இதுபோன்றதுதான். ஏற்கனவே அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் மேடை நாடக காட்சியொன்றில் கிருஷ்ண தேவராய மன்னன் கேரக்டரில் நடித்துள்ளார்.

ஸ்ரீராகவேந்திரர் படத்தில் ராகவேந்திரராக வந்தார். சந்திரமுக படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் வேட்டையன் என்ற மன்னனாக வந்தார். அதுபோல் சரித்திர கேரக்டரில் கே.எஸ்.ரவிகுமார் படத்தில் ரஜினி நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்க அனுஷ்காவிம் பேசி வருகின்றனர். இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மைசூரில் அரண்மனை அரங்குகள் அமைக்கப்படுகின்றன.


Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)