
இரண்டாம் உலகம் தோல்விக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன் குறுகிய காலகட்டத்தில் ஒரு புதிய படம் இயக்க உள்ளார்.
இந்த படத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது தெரிந்த ஒன்றே. ஜோடியாக த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ‘அலை’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்கு பிறகு சிம்புவும், த்ரிஷாவும் இணையும் மூன்றாவது படம் இது. ஆனால் சிம்புவும், இயக்குனர் செல்வராகவனும் இணையும் முதல் படம் இதுதான். செல்வராகவன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 25ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.
ரொமாண்டிக் த்ரில்லராக உருவாக இருக்கும் இந்தப் படத்தில் சிம்பு இதுவரை நடிக்காத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். புதுப்பேட்டை படத்திற்கு பிறகு இந்தப் படம் மூலம் யுவன் சங்கர் ராஜாவுடன் மீண்டும் கூட்டணி சேர்கிறார் செல்வராகவன். ரேடியன்ஸ் மீடியா சார்பில் வருண் மணியன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
மேலும் இந்த படத்திற்கு ‘அலைவரிசை’ என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் அறிவிக்கவில்லை. சிம்பு, த்ரிஷா ஜோடி, செல்வா மீண்டும் யுவனுடன் கூட்டணி என ரசிகர்களைக் கவரும் நிறைய விஷயங்கள் இருப்பதால் படத்தைப் பற்றிய பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.