Recent Post

ஹீரோக்களை மடக்க பிரியாணி விருந்து: பிரியா ஆனந்த் சூப்பர் பிளான்



ஹீரோக்களை மடக்க பிரியாணி விருந்து: பிரியா ஆனந்த் சூப்பர் பிளான்
ஹீரோயின்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து ஆர்யா மடக்குவதுபோல் ஹீரோக்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து மடக்க சூப்பர் பிளான் போட்டிருக்கிறார் ப்ரியா ஆனந்த். தன்னுடன் ஜோடியாக நடிக்கும் ஹீரோயின்களுக்கு பிரியாணி கொடுத்து அசத்துவதில் கைதேர்ந்தவர் ஆர்யா. அந்த பாணியை பிரியா ஆனந்தும் பின்பற்ற தொடங்கி இருக்கிறார்.

நடிப்பு, படிப்பு என்று பிஸியாக இருந்துவிட்ட பிரியா ஆனந்துக்கு சமையல் கற்றுக்கொள்ள நேரம் இல்லை. இந்நிலையில் அவருக்கு ஷூட்டிங்கிலிருந்து 10 நாள் விடுமுறை கிடைத்திருக்கிறது. இந்த விடுமுறையில் வீட்டு சமையல்காரரிடம் சுவையான பிரியாணி தயாரிக்க பயிற்சி எடுக்கிறார். இதுதவிர வட நாட்டு உணவுவகைகள் மற்றும் சைனீஸ் ரெசிப்பிகளையும் செய்ய கற்கிறார். கற்ற கலையை சீக்கிரமே பரிசோதிக்கவும் முடிவு செய்திருக்கிறார்.

தற்போது நடித்து வரும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா பட குழுவினருக்கு முதன்முறையாக தன் கையால் சமைத்து பிரியாணி விருந்து தருவதாக கூறி இருக்கிறார் பிரியா ஆனந்த். எப்போது பிரியாணி தரப்போறீங்க என்று பட ஹீரோக்கள் விமல், சூரி, டைரக்டர் ஆர்.கண்ணன் அவரை நச்சரித்த வண்ணம் இருக்கிறார்களாம். ஷூட்டிங் இறுதிநாளில் தருவதாக அவரும் வாக்கு கொடுத்திருக்கிறாராம். 

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)