Recent Post

நடிகைசுஜிபாலா புகார்: டைரக்டர் ரவிக்குமாரிடம் போலீசார் விசாரணை



நடிகைசுஜிபாலா புகார்: டைரக்டர் ரவிக்குமாரிடம் போலீசார் விசாரணை

சந்திரமுகி,கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, கலவரம் உள்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் சுஜிபாலா. இவர் நேற்று இரவு வடபழனி போலீஸ் நிலையத்தில் டைரக்டர் ரவிக்குமார் மீது புகார் அளித்தார். பின்னர் நிருபர்களிடம் சுஜிபாலா கூறியதாவது: கடந்த 2011ல், உண்மை படத் தில் ரவிக்குமார் ஜோடியாக நடித்தேன். திடீரென ஒரு நாள் அவர் என்னை காதலிப்பதாக கூறினார். என் பெற்றோர் ஒப்பு கொள்ள மாட்டார்கள் என்று மறுத்தேன். இதையடுத்து ரவிக்குமார் என் பெற்றோரை சந்தித்தார். 2012ல் நாகர்கோவிலில் நிச்சயதார்த்தம் நடந்தது. எனினும், எனக்கு திருமணம் வேண்டாம் என்று மறுத்தேன்.

தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றேன். ஆனால், என்னை காப்பாற்றி விட்டார்கள். நீ என்னை கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்றால், நான் செத்துவிடுவேன் என்றும், உன்னை அசிங்கப்படுத்துவேன் என்றும் போனில் ரவிக்குமார் மிரட்டுவார். ஆபாசமாகவும் பேசுவார். எனக்கும், அவருக்கும் திருமணம் நடக்கவில்லை. ரவிக்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி, 2 குழந்தைகள் இருப்பது எனக்கு தெரிந்து விட்டது. விலாசம் படத்தில் நடிக்கும் என்னை சிலருடன் சம்பந்தப்படுத்தி தப்புத் தப்பாக பேசுகிறார். அவர் பேசியதை செல்போனில் ரெக்கார்ட் செய்து வைத்திருக்கிறேன். ரவிக்குமார் வாங்கியுள்ள கடன்களை அடைக்க என் பெயரை பயன்படுத்துவதாக நினைக்கிறேன்.

கடன்காரர்கள் என்னிடம் வந்து கேட்கிறார்கள். ரவிக்குமாருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சமீபத்தில் நான் ஒரு நிகழ்ச்சியில் நடனம் ஆடிய போது, ரவிக்குமார் என்னை அடித்தார். இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செய லாளர் ராதாரவியிடம் புகார் அளித்தேன். இனி ரவிக்குமாரின் படத்தில் நான் நடிக்க மாட்டேன். என் உயிருக்கும், என் பெற்றோர் உயிருக்கும் ரவிக்குமாரால் ஆபத்து ஏற்படும் என்று பயப்படுகிறேன். இதுகுறித்து போலீசில் புகார் கூறிஉள்ளேன். இவ்வாறு நடிகை சுஜிபாலா கூறினார். அதன் அடிப்படையில் இருவரையும் நேருக்கு நேர் வைத்து விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சுஜிபாலா அளித்தது பொய் புகார் என்று தெரிந்தால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)