
கிரீடம், மதராசப்பட்டணம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இவரும் நடிகை அமலாபாலும் நீண்ட நாட்களாகவே காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனாலும் இருவரும் அது குறித்து மறுப்பு அறிக்கைகூட வெளியிடவில்லை. இந்நிலையில் அமலாபாலும், ஏ.எல்.விஜய்யும் ஜுன் 12-ம் தேதி திருமணம் செய்துகொள்ளப் போவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருவரும் இணைந்து அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
தலைவா பட இயக்குநர் .விஜய்யை அமலாபால் காதலித்துவருவதாகவும், இருவரும் வரும் ஜூனில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின. இதற்கு பதில்அளித்துள்ள அமலாபால், இது குறித்து பத்திரிகை நண்பர்களுக்கும், பொதுமக்களுக்கும், எங்கள் எதிர்காலம் குறித்து, விஜய் வெளிநாட்டில் இருந்து திரும்பியவுடன் ,நானும், விஜயையும் முறைப்படி அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.