சென்னை: தமிழ்ப்படங்களில் நிச்சயம் ஒரு பாடலாவது குத்துப்பாடலாக அமைந்து விடுகிறது. காரணம் ரசிகர்களின் விருப்பம் எனப் படத் தயாரிப்பு தரப்பு விளக்கம் சொல்கிறது. முன்பெல்லாம் சில குறிப்பிட்ட நடிகைகள் தான் இத்தகைய கவர்ச்சிப்பாடலுக்கு என நடனமாடுவார்கள். சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி, அனுராதா என கவர்ச்சி நடனம் ஆடியே ரசிகர்களின் கனவுக்கன்னிகள் ஆன நடிகைகள் ஏராளம். ஆனால், கதாநாயகிகளே கவர்ச்சி நடனம் ஆட சம்மதிக்க ஆரம்பித்த காலங்களில் இத்தகைய தனிப்பட்ட நடிகைகளின் தேவை குறைந்து போனது. காலப்போக்கில் படத்தின் நாயகிகளே படம் முழுவதும் குடும்பக் குத்து விளக்காக வந்தாலும், ஒரு பாடலிலாவது கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை திருப்தி படுத்தினர். இந்நிலையில், பாலிவுட் நடிகைகளை ஒரு பாட்டிலாவது ஆட வைத்து விடும் கலாச்சாரம் தற்போதைய சினிமாக்களில் பரவி வருகிறது. நாயகியின் சம்பளத்தை விட இந்தக் குறிப்பிட்ட பாடலுக்கு ஆட சம்பந்தப் பட்ட நடிகைகள் பெறும் சம்பளம் அதிகம். இதனால், தமிழ்ப்படங்களில் ஒருபாடலுக்கு ஆட பாலிவுட் நடிகைகளும் அதிக ஆர்வம் காட்டுகிறார்களாம். அவ்வாறு சமீபத்திய தமிழ் படங்களில் குத்தாட்டம் போட்ட பாலிவுட் நடிகைகள் தான் இவர்கள்....

சூர்யாவின் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அஞ்சான் படத்தில் ஒருபாடலுக்கு நடனமாடுகிறார் சித்ரங்கடா சிங். ‘சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி...' எனத் தொடங்கும் அப்பாடலுக்கு நடனமாட அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல நீலப்பட நடிகையாக அறியப்பட்ட சன்னி லியோன், தற்போது இந்திப்படங்களில் நாயகியாக வலம் வருகிறார். இவர், தமிழில் ஜெய்-சுவாதி நடிப்பில் உருவாகும் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இருக்கிறாராம். ‘லோ ஆன லைஃப்' என்ற பாடலுக்கு வெள்ளை உடையில் தேவதையாக கனவுப் பாடல் பாடுகிறாராம் சன்னி. ஜெய்யின் கன்னத்தில் சன்னி லியோன் முத்தமிடுவது போன்ற போட்டோ தான் கோலிவுட்டின் ஹாட் இப்போ...

நகுலின் ‘நான் ராஜாவாகப் போகிறேன்' படத்தில் ‘மல்கோவா' பாடலுக்கு நடனமாடிய ஜரீனா கானும் பாலிவுட் நடிகை தான்.

சூர்யாவின் மாற்றான் படத்தின் ‘தீயே.. தீயே...' பாடலுக்கு தீயாய் ஆடியவர் தான் இஷா ஷெர்வானி. இப்பாடலில் இஷாவுடன் சூர்யா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரும் நடனமாடியிருப்பார்கள்.

ஜாக்கிசான் உடன் நடித்தவர் எனக் கொண்டாடப் பெற்றவர் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத். கமலின் தசாவதாரம் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மல்லிகா. அதேபோல், சல்மான் கானின் தபாங் படத்தை ரீமேக்கான சிம்புவின் ஒஸ்தியிலும் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.