
கண்ணா லட்டு தின்ன ஆசையா என்கிற படத்திற்கு பிறகு சந்தானம் நாயகனாக நடிக்கும் படம் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'.
நாயகியாக ஆஷ்னா சாவேரி நடிக்கிறார். இவர்களுடன் மிர்ச்சி செந்தில் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். காமெடி நடிகர் ஸ்ரீநாத் இந்தப் படத்தை இயக்குகிறார். தற்போது இப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது. சமீபத்தில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்றது. அதில் காட்சிப்படி சந்தானம் வீடுவீடாகச் சென்று தண்ணீர் கேன்களை சப்ளை செய்ய வேண்டுமாம்.
ஆனால் சைக்கிளில் ஆர்ட் டிபார்ட்மெண்ட்டை சேர்ந்தவர்கள் டம்மி கேன்களை வைப்பதற்காக தண்ணீர் நிரம்பிய கேன்களை வைத்து கட்டிவிட்டார்களாம். இதையறியாத சந்தானம் சைக்கிளில் ஏறி உட்கார, உடனே முன் சக்கரம் ஆகாயத்தை நோக்கி தூக்கியிருக்கிறது. உடனே சந்தானம் அருகிலிருந்த பையன்களிடம் சைக்கிளை அவசரஅவசரமாக பிடித்துச் சொல்லிருக்கிறார்.
இதையடுத்து அந்த பையன்கள் சைக்கிளை பிடித்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் சந்தானத்தையும் கீழே விழாமல் தாங்கினார்களாம். தெலுங்கில் ராஜமெளலி இயக்கத்தில் மாபெரும் வரவேற்புபெற்ற 'மரியாத ராமண்ணா' படத்தின் ரீமேக்தான் இது. 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தையும் முதல் பிரதி அடிப்படையில் பி.வி.பி சினிமாஸ் நிறுவனத்திற்கு சந்தானம் தயாரிக்கிறார்.