Recent Post

இந்திப் படத்தில் நடிக்கிறார் அனுபமா



south-indian-model-actress-anubhama-portfolio-stills-18

பொக்கிஷம் படத்தின் மூலம் குணசித்திர நடிகையாக அறிமுகமானவர் அனுபமா குமார். அதன் பிறகு தொடர்ச்சியாக குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்திற்காக மொட்டை போட்டு நடித்தார்.
தற்போது அனுபமா மை சன் இஸ் கை என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இதனை லோகேஷ் என்பவர் இயக்குகிறார்.
தாயுக்கும், மகனுக்கும் இடையிலான ஒரு சிக்கலான உறவை சொல்கிற படம். அதாவது ஓரினபால் ஈர்ப்பு கொண்ட மகனால் தாய் படும் துன்பமும், மகனை மாற்றவதும்தான் கதையாம்.
“சிறிய பட்ஜெட் படம் என்பதால் அனுபமாவை ஒரு சிறிய கேரக்டரில்தான் நடிக்க அழைத்தோம். ஆனால் அவர் கதையை கேட்டவுடன் அதில் உள்ள ஆழத்தையும், எங்கள் நோக்கத்தையும் புரிந்து அந்த அம்மா கேரக்டரை நான் சம்பளம் வாங்காமல் நடித்து தருகிறேன் என்று சொல்லி நடித்துக் கொடுத்தார்” என்கிறார் இயக்குனர் லோகேஷ்.


Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)