Recent Post

அப்பாவுக்கு பிரச்சாரம் செய்ய மாட்டேன்: சோனாக்ஷி சின்ஹா அறிவிப்பு



sonakshi-shatrughan
பிரபல இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் பீகார் மாநிலம் பாட்னா தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது மகள் சோனாக்ஷி சின்ஹா இந்தியில் இளம் முன்னணி நடிகை.
அவர் அப்பாவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்வார், அப்பா வழியில் அரசியலுக்கு வருவார் என பல்வேறு யூகங்கள் இருந்தது. அதற்கு பதில் அளித்து சோனாக்ஷி நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:
எனக்கும், என் தந்தைக்கும் ஒரே மாதிரியான சிந்தனைதான். அரசியலும் அப்படித்தான். அதற்காக நான் அவரைபோல அரசியலில் சேர மாட்டேன். அரசியலில் ஆர்வமோ, விருப்பமோ இல்லை. யார் நல்லது செய்வார்களோ அவர்களுக்கு ஓட்டு போடுவேன் அவ்வளவுதான்.
என் தந்தை அரசியலில் இருக்கிறார் என்பதற்காக நானும் அரசிலுக்கு வரவேண்டும் என்கிற அவசியம் இல்லை. யாரும் என்னை அரசியலுக்குள் தள்ளி விடவும் முடியாது. ஒரு நடிகையாக இருப்பதே பூரண மகிழ்ச்சியாக இருக்கிறது.
என்னை விட என் தந்தை மூத்த நடிகர். என்னைவிட அவரை மக்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருக்கும்போது நான் எதற்கு அவருக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும். நான் அவருக்காக பிரச்சாரம் செய்வதை அவரும் விரும்ப மாட்டார்.
அவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. தற்போது நாட்டின் முன் சவாலாக இருக்கும் பிரச்னை லஞ்சமும், ஊழலும்தான். அதனை ஒழிக்க நரேந்திர மோடியால் மட்டுமே முடியும் என்று நம்புகிறேன். அவர் வெற்றிபெற வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு சோனாக்ஷி கூறியுள்ளார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)