Recent Post

அஜித் பிறந்த நாளில் கோச்சடையான்?




ரஜினிகாந்த் படமென்றால், ஒவ்வொரு நாளும் ஒரு செய்தி வெளியாவது வழக்கம். அவர் இரட்டை வேடங்களில் நடித்து அவருடைய இளைய மகள் சௌந்தர்யா இயக்கியுள்ள ‘கோச்சடையான்’ படம் என்றைக்கு வெளியாகும் என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இப்படம் ஏற்கெனவே பல தேதிகளில் ரிலீஸ் ஆவதாக எதிர்பார்க்கப்பட்டு, பிறகு அந்த தேதிகளில் படம் ரிலீஸாகாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் லேட்டஸ்ட் தகவல்களின்படி படத்தை அஜித்தின் பிறந்த நாளான மே-1-ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இப்போது படக்குழுவினர் அதற்கான வேலைகளில் முழு மூச்சில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் கோச்சடையான் படத்தின் கதை–திரைக்கதை–வசனத்தை கே.எஸ்.ரவிகுமார் எழுதியிருக்கிறார். ரஜினிகாந்த் ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் நடித்து இருக்கிறார். சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கி ஷராப், ஷோபனா ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர். கவிஞர்கள் வாலி, வைரமுத்து ஆகிய இருவரும் எழுதிய பாடல்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கிறார்.
சமீபத்தில் கோச்சடையான் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. தணிக்கை குழுவினரும் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் அனைத்து தரப்பினரும், குழந்தைகள் உட்பட இந்தப் படத்தைப் பார்க்கலாம். உலகம் முழுவதும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் ரிலீஸாக உள்ளது.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)