Recent Post

தமிழ் மண்ணில் தமிழனை மிரட்டுவதா: தெனாலிராமன் விவகாரத்தில் இயக்குனர் வ.கௌதமன் ஆவேசம்




நீண்ட இடைவெளிக்கு பின் வடிவேலு நடித்து வெளிவர உள்ள படம் தெனாலிராமன். இந்த படத்தில் கிருஷ்ண தேவராயர் குறித்து தவறாகச் சொல்லப்பட்டிருப்பதாக தெலுங்கு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளன. மேலும் படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றன. இந்த விவகாரம் குறித்து  இயக்குனர் வ.கௌதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ் திரையுலகில் என்.எஸ்.கிருஷ்ணன், டணால் தங்கவேலு,கவுண்டமணி வரிசையில் நகைச்சுவையின் உச்சமான தமிழ் கலைஞன் வடிவேலுவை தமிழ் மண்ணில் அதுவும் அவரது வீட்டிற்கே வந்து பெரும் கூட்டத்துடன் வந்து மிரட்டி விட்டு சென்றிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
ஒரு திரைப்படம் என்பது கதை ஆசிரியரால் தொடங்கி தயாரிப்பாளரால் திட்டமிடப்பட்டு இயக்குனரால் செயல்படுத்துவது ஆகும். அப்படியிருக்க நேரடியாக அதில் நடித்த நடிகனை முற்றுகையிடுவது என்பதும், அவமானப்படுத்துவதும்,அச்சுறுத்துவதும் நேர்மையானதல்ல. வடிவேலு இனம்,மொழி பார்க்காமல் அனைவரையும் சிரிக்க வைத்த கலைஞன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் திரைக்கு  வருவதை தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
சம்மந்தப்பட்டவர்கள் ஏதாவது சந்தேகம் என்றால் படத்தின் தயாரிப்பு  நிறுவனத்தை அணுகி உரிய முறையில் நடந்துகொள்வதுதான் அவர்களுக்கும் நல்லது .மற்றவர்களுக்கும் நல்லது. அதனை விட்டுத்து இது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவதை வடிவேலுவிடம் மட்டுமல்ல தமிழ் மண்ணில் ஒரு தமிழனிடமோ அல்லது ஒட்டு மொத்த தமிழினத்தையோ உரசிப்பார்க்கும் நிகழ்வாக கருதி அதற்கேற்ற பின்விளைவுகளை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும் என்பதை தமிழர்களின் சார்பாக தெரிவித்துக் கொள்வதாக தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)