Recent Post

அகிலா முதலாம் வகுப்பு




தாய் திரையரங்கம், இளங்கவி கலைக்கூடம் சார்பில் வி.பி.சரணகுமார், டி.செந்தில் இணைந்து தயாரிக்கும் படம் ‘அகிலா முதலாம் வகுப்பு’. இதில் நாயகனாக நசீர் அறிமுகமாகிறார். இவர் அஞ்சலி, தளபதி உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

சென்னை ஆணழகன் போட்டியில் வென்ற சகாயராஜ் இன்னொரு நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக புதுமுகம் சுவாதிஜா மற்றும் பேபி பிரஷிதா, சுப்புராஜ், வாசுதேவன், சுகி, பச்சை முத்து, தமிழ்முத்து, சிதம்பரம், கோவை புஷ்பா, காட்டுராஜா, மாரி ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி சுரேஷ்-சரண் என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்குகிறார்கள். ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்ற வார்த்தைகளுக்கேற்ப சில குடும்பங்களில் பெண்களின் சில தவறான முடிவினால் அக்குடும்பம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதே கதை.

கிராமிய பின்னணியில் தயாராகிறது. கண்ணு ரெண்டும் மேயுதடி, தந்தானே தானே என்ற நாட்டுப்புற பாடல் படத்தில் இடம் பெறுகிறது. கோவை, கோபி செட்டிப்பாளையம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடந்து முடிவடைந்துள்ளது.

ஒளிப்பதிவு: எஸ்.ஆர்.சந்திரசேகர், இசை: கே.பி.சுல்பி, பாடல்: கே.பி.சுல்பி, சுரேஷ், ஷ்யாம் பிரின்ஸ், எடிட்டிங்: கோபால், நடனம்: கோபால்ஜி, அஜய்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)