Recent Post

கதைக்கு தேவையென்றால் முத்தக்காட்சியில் நடிக்க தயார்: லட்சுமி மேனன்




விஷால்-லட்சுமி மேனன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் படம் ‘நான் சிகப்பு மனிதன்’. இப்படத்தை திரு இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் ஏப்ரல் 11ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படம் திரைக்கு வருவதையொட்டி பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் விஷால், லட்சுமி மேனன், இனியா, இயக்குனர் திரு, யுடிவி தனஞ்செயன் உள்பட பலர் கலந்துக்கொண்டனர். விழாவில் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விஷால்-லட்சுமி மேனன் முத்தக்காட்சி குறித்து இருவரிடமும் கேட்கப்பட்டது.
விழாவில் பேசிய விஷால், படத்தில் இரண்டு சுவாரஸ்யமான காட்சிகள் இருக்கின்றன. ஒன்று நீருக்கடியில் நானும்  லட்சுமி மேனனும் நடித்தது. இன்னொன்று முத்தக் காட்சி. முத்தக் காட்சி என்றவுடன் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வரும் ஃப்ரெஞ்சு கிஸ் மாதிரி இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள். இது கதைக்கு தேவைப்படுகிற முத்தக் காட்சி. இந்த முத்தக் காட்சி ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது என்றார் விஷால்.
தொடர்ந்து பேசிய லட்சுமி மேனன், கதைக்கு தேவைப்பட்டால் எல்லா கதாநாயகர்களுடன் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தக்காட்சியில் நடிக்கத் தயார். ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் கதைக்கு தேவைப்பட்டதால் தான் அந்தக் காட்சியில் நடித்தேன் என்றார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)