
கிராமம் முழுவதற்கும் ஜெனரேட்டரில் மின்சாரம் சப்ளை செய்தது அழகிய பாண்டிபுரம் பட குழு. இதுபற்றி இயக்குனர் ந.ராயன் கூறியதாவது: எல்லா பெரிய பகைக்கும் ஒரு சிறிய பிரச்னைதான் காரணமாக இருக்கிறது. அந்த பிரச்னையை தீர்த்துவிட்டால் பகையே வராது என்பதுதான் கதையின் கரு. அகிலன் ஹீரோ. ‘கானகம்‘, ‘எதிர்வீச்சு‘ படங்களில் நடித்த அஞ்சனா கீர்த்தி ஹீரோயின். இதன் ஷூட்டிங் தேனி அருகில் உள்ள கிராமத்தில் நடந்தது. ஹீரோ, ஹீரோயின் ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டுக்கு மாடியிலிருந்து கயிற்றில் தொங்கியபடி செல்லும் காட்சி படமாக்கப்பட்டது.
மேலே ஹை ஓல்டேஜ் மின் கம்பிகள் இருந்தது. மின்சாரம் தடைபட்டிருந்ததால் ஷூட்டிங் தொடர்ந்து நடத்தினோம். அந்த பகுதி முழுவதும் வெளிச்சமாக்கும் வகையில் ஷூட்டிங்கிற்கு வந்திருந்த ஜெனரேட்டர் மூலமாக கிராமம் முழுக்க லைட் போட்டு ஷூட்டிங் நடத்தப்பட்டது. ஒரு பகுதியில் மட்டும் மின்சாரம் இருந்தால் போதும் என்றாலும் மக்கள் தேவைக்காக சிறு கிராமம் என்பதால் மின்சாரம் வழங்கினோம்.
இதற்கு கிராம மக்கள் ஒத்துழைத்தனர். கவர்ச்சி ஆட்டத்துக்காக இணைய தளம் மூலம் ஆக்னஸ் என்ற பாலிவுட் நடிகையை தேர்வு செய்து அழைத்து வந்து ஷூட்டிங் நடத்தப்பட்டது. அகிலன் ஒளிப்பதிவு. பரத்வாஜ் இசை. நா.கிருபாகரன் தயாரிப்பு. இவ்வாறு ந. ராயன் கூறினார்.