Recent Post

முதன் முறையாக தாய்மொழியில் அனுஷ்கா!




அனுஷ்கா முதன் முறையாக கன்னடத்தில் நடிக்கவிருக்கிறார்.
தற்போதைக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா ஷெட்டி. அவர், தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் ‘பாஹுபலி’, குணசேகர் இயக்கும், ‘ருத்ரம்மா தேவி’ ஆகிய பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகிறார்.
இவைதவிர, தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாகவும், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும் நடிக்கவிருக்கிறார். கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் கொடிக்கட்டிப் பறக்கும் நடிகை அனுஷ்கா, தனது தாய் மொழியான கன்னடத்தில் முதல் முறையாக நடிக்கவிருக்கிறார்.
இந்த படத்திற்கு 'ஜக்கு தாதா' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. கன்னடத்தில் மிகுந்த பொருட்செலவில் தயாராகும் இந்த படத்தில் அனுஷ்கா, முன்னணி நடிகர் தர்ஷனுக்கு ஜோடியாக நடிக்கிறார். அதுவும் படத்தில் அவர் ஆக்ஷன் ஹீரோயினியாக கலக்கவிருக்கிறாராம்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)