Recent Post

மணிரத்னம் படத்தில் மகேஷ்பாபு!




கடல் படத்திற்கு பிறகு மணிரத்னம் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்.
இந்த முறை அவர் தனது கவனத்தை தெலுங்கு பக்கமாக திருப்பியிருக்கிறார். ஆம், அடுத்தப் படத்தை தெலுங்கில்தான் இயக்குகிறார். மல்டி ஸ்டார் கதையான இந்தப்படத்தில் மகேஷ்பாபுவுடன் நாகார்ஜூனா, ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள்.
மணிரத்னம் படத்திலிருந்து மகேஷ்பாபு விலகிவிட்டார் என்கிற செய்தி கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது நினைவிருக்கலாம். ஆனால் சுஹாசினி அந்த செய்தியை மறுத்துள்ளார். மாறாக மகேஷ்பாபு படத்தில் நடிக்கிறார் என்கிற தகவலை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இதில் மகேஷ்பாபு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவிருக்கிறாராம்.
சில வருடங்களுக்கு முன்பே மகேஷ் பாபு நடிக்க பொன்னியின் செல்வன் என்ற படத்தை மணிரத்னம் இயக்குவதாக இருந்த. பின்னர் அது கைவிடப்பட்டது. தற்போது இருவரும் புதிய படத்தில் இணைய உள்ளனர். தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் தயாராகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்க இருக்கிறது.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)