
கவுதம்மேனன் இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார்.
இது அஜீத்துக்கு 55–வது படம் ஆகும். ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். நாளை மறுநாள் (9–ந்தேதி) இதன் படப்பிடிப்பு துவங்குகிறது. இதில் அஜீத் 8 பேக்ஸ் உடல் கட்டுடன் வருகிறார். இதற்காக கடும் உடற்பயிற்சிகள் செய்து வருகிறார்.
இந்த படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்க கதாநாயகி தேர்வு நடந்தது. பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்ட பிறகு அனுஷ்கா தேர்வாகியுள்ளார். அனுஷ்கா ஏற்கனவே விஜய், விக்ரம், சூர்யா, ஆர்யா போன்றோருடன் நடித்துள்ளார். முதல் தடவையாக இந்த படத்தில் அஜீத்துடன் ஜோடி சேர்கிறார்.
அனுஷ்கா ருத்ரமாதேவி, பகுபாலி என இரு வரலாற்று படங்களில் நடித்து வருகிறார். அதிக பொருட் செலவில் இப்படங்களை எடுக்கின்றனர். தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் இது தயாராகிறது.