
லட்சுமி மேனன் மீண்டும் மலையாளப் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார்.
இந்தப் படத்திற்கு அவதாரம் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். படத்தை இயக்குவது பிரபல இயக்குனர் ஜோஷி. நாயகனாக திலீப் நடிக்கிறார். திலீப் - ஜோஷி இருவரும் இணையும் ஏழாவது படம் இது. இந்தப்படத்தில் மணிமேகலா என்கிற இன்சூரன்ஸ் ஏஜெண்ட் கேரக்டரில் நடிக்கிறார் லட்சுமி மேனன்.
படப்பிடிப்பு ஏற்கெனவே துவங்கி விட்டது. ஆரம்பத்தில் இரண்டு மலையாளப் படங்களில் மட்டும் நடித்தார் லட்சுமி மேனன். பின்னர் தன்னுடைய முழு கவனத்தையும் தமிழ் திரையுலகம் பக்கம் திருப்பினார்.
அதன் பயணாக தமிழில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். இங்கு விஷால், விமல் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்போது மறுபடியும் தனது தாய்மொழியில் நடிக்கிறார் லட்சுமி மேனன்.