Recent Post

தேர்தல் விளம்பர படங்களில் நடிகர்கள்



தேர்தல் விளம்பர படங்களில் நடிகர்கள்
தேர்தல் விளம்பர படங்களில் நடிகர்கள் வருகிறார்கள்.

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தேர்தல் கமிஷன் இந்த விளம்பர படங்களை தயார் செய்துள்ளது. ஜனநாயக கடமையாற்ற தவறாது வாக்களிக்கும் படி வற்புறுத்தியும் ஓட்டுக்கு யாரேனும் பணம் கொடுத்தால் வாங்க கூடாது என்பதை வலியுறுத்தியும் இந்த விளம்பர படங்கள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

கமல் நடித்துள்ள தேர்தல் விளம்பர படம் ஏற்கனவே வெளிவந்துள்ளது. வாக்காளர்கள் தவறாமல் ஓட்டு போட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஓட்டுக்கு பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிப்பது எப்படி என்ற விழிப்புணர்வு பிரசார படத்தில் நடிகர் அர்ஜூன் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவரும் நடித்துள்ளனர். இவை சி.டி.யாக தயார் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் இந்த சி.டி. வாக்காளர்களுக்கு திரையிட்டு காட்டப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்துள்ளனர்.

இந்த பிரசார சி.டி.யை தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னையில் வெளியிட்டார்.

நடிகர்களின் தேர்தல் விழிப்புணர்வு பிரசார உரைகள் எப்.எம். ரேடியோக்களிலும் ஒலிபரப்பப்படுகின்றன.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)