
என்னைவிட ஆண்ட்ரியா ரொம்பவே வேகமானவர் என்றார் பார்வதி. மரியான், பூ, சென்னையில் ஒரு நாள் என தேர்வு செய்தே படங்களை ஒப்புக்கொள்பவர் பார்வதி. அடுத்து கமலின் உத்தமவில்லன் படத்தில் நடிக்கிறார். இதேபடத்தில் ஆண்ட்ரியாவும் நடிக்கிறார். பார்வதி ரொம்பவே சாது. ஆண்ட்ரியா அதிரடியானவர். எதிரெதிர் துருவத்துக்கு அட்ராக்ஷன் அதிகம் என்பதுபோல் ஆண்ட்ரியாவுக்கும், பார்வதிக்கும் பிரண்ட்ஷிப் கெமிஸ்ட்ரி ரொம்பவே ஒத்துப்போகிறதாம்.
இருவரும் ஷூட்டிங்கில் இருக்கும்போது, அமைதியாக உட்கார்ந்திருக்கும் பார்வதியை அரட்டையடித்தே புலம்ப வைத்துவிடுகிறாராம் ஆண்ட்ரியா. சமீபத்தில் இருவரும் பேசிக்கொண்டிருந்த காட்சியை போட்டோகிராபர் படம் எடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென்று பார்வதியின் முதுகுபக்கம் சென்ற ஆண்ட்ரியா அவருடைய கழுத்தில் கையை போட்டு இறுக்கியபடி போஸ் கொடுத்தார். ஆண்ட்ரியா பற்றி பார்வதி கூறும்போது, ஆண்ட்ரியா ரொம்பவே ஜாலியானவர். எங்கள் குழுவில் அவர் ரொம்பவே வேகமானவர்.
இணைய தள பக்கங்களை கையாள்வதில் நான் கொஞ்சம் வேகம் குறைந்தவள். ஆனால் ஆண்ட்ரியா உடனுக்குடன் இணைய தள தொடர்பில் இருப்பார். எனது சோம்பேறி தனத்தால் இணைதள பக்கங்களிலிருந்து விலகியே இருக்கிறேன். ஆண்ட்ரியாவிடமிருந்து நிறைய விஷயங்களை கற்க வேண்டும். அவரது சுறுசுறுப்பு என்னையும் கொஞ்சம் தொற்றிக்கொள்ளும் என நம்புகிறேன். எங்களுக்குள் ஏற்பட்ட நட்பை கண்டு பலர் வியக்கிறார்கள். இதற்காக கமலுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். எங்களை ஒரே படத்தில் அவர் நடிக்க வைத்ததால்தான் இந்த நட்பு சாத்தியமானது என்றார்.