Recent Post

வாலு படத்தில் நடிக்க மறுப்பு: ஹன்சிகா மீது நடவடிக்கை?

வாலு படத்தில் நடிக்க மறுப்பு: ஹன்சிகா மீது நடவடிக்கை?
சிம்புவும் ஹன்சிகாவும் வாலு படத்தில் ஜோடியாக நடித்தனர். இதன் படப்பிடிப்பில்தான் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டார்கள். இருவருமே காதலை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஆனால் சில வாரங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.காதலை முறித்து விட்டதாக அறிவித்தனர்.

இதனால் வாலு படம் முடிவடையாமல் நிற்கிறது. அந்த படத்தில் நடிக்க ஹன்சிகா மறுத்து வருகிறார். இதையடுத்து ஹன்சிகா மீது வாலு பட தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

வாலு படத்தில் நடிக்க ஹன்சிகாவுக்கு ரூ.70 லட்சம் சம்பளம் பேசி அதில் ரூ.55 லட்சத்தை கொடுத்து விட்டதாகவும், பாடல் காட்சி முடிந்ததும் மீதி 15 லட்சத்தை தந்து விடுகிறேன் என்று கூறினேன் என்றும் ஆனால் வாலு படத்துக்கு கால்ஷீட் கொடுத்து நடிக்க ஹன்சிகா மறுப்பதாகவும் புகாரில் கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கம் இகுறித்து விசாரணையை துவங்கியுள்ளது. ஹன்சிகாவிடமும் விசாரணை நடக்கிறது. வாலு படத்தை முடித்து கொடுக்கும்படி ஹன்சிகாவிடம் பட அதிபர் சங்கம் வலியுறுத்தும் என தெரிகிறது. அவர் மறுத்தால் தமிழ் படங்களில் நடிக்க தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Read more ...

பேச்சுவார்த்தையில் சுமூகம்: தெனாலி ராமன் திட்டமிட்டபடி ஏப்.18-ல் வெளியாகிறது

பேச்சுவார்த்தையில் சுமூகம்: தெனாலி ராமன் திட்டமிட்டபடி ஏப்.18-ல் வெளியாகிறது
வடிவேலு இரு வேடங்களில் நடிக்கும் 'தெனாலிராமன்' படம் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடித்திருக்கும் இப்படத்திற்கு தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இப்படத்தில் கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்தி காட்சிகள் வைத்துள்ளதாகவும் எனவே அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் தெலுங்கு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. வடிவேலு வீட்டை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர்.

ஒருபுறம் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் மறுபுறம் தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் வடிவேலுக்கு ஆதரவும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், படத்தை எப்படியாவது வெளிக்கொண்டு வரவேண்டும் என தெலுங்கு அமைப்பினரும், தெனாலிராமன் படத் தயாரிப்பாளர்களும் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இன்றும் இரு தரப்பினரும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ‘தெனாலிராமன்’ திட்டமிட்டப்படி வரும் ஏப்ரல் 18-ந் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது.

Read more ...

ஜெனரேட்டர் நிறுவனம் மீது வழக்கு: ரம்யா கிருஷ்ணனுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

ஜெனரேட்டர் நிறுவனம் மீது வழக்கு: ரம்யா கிருஷ்ணனுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு
பிரபல தமிழ் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் ரஜினியுடன் படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். டி.வி. நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

ரம்யா கிருஷ்ணன் ஜெனரேட்டர் நிறுவனம் ஒன்றின் மீது நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 2010–ம் ஆண்டு ஜூலை மாதம் 23–ந்தேதி ரூ.4 லட்சத்து 68 ஆயிரத்துக்கு கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏஜென்சியிடம் ஜெனரேட்டர் வாங்கியதாகவும் அது வாங்கிய சில நாட்களிலேயே பழுதாகி விட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டு இருந்தார். புது ஜெனரேட்டர் வழங்கும்படி ஏஜென்சிக்கு நோட்டீஸ் அனுப்பினேன். அவர்கள் மறுத்துவிட்டனர் என்றும் புகாரில் கூறி இருந்தார்.

இந்த வழக்கை நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி ஆர்.மோகன்தாஸ் உறுப்பினர் கலையரசி ஆகியோர் விசாரித்தனர். இரு தரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து ஜெனரேட்டர் நிறுவனமும் ஏஜென்சியும் ரம்யா கிருஷ்ணனுக்கு ரூ.52 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் ஜெனரேட்டருக்கு கொடுத்த 4 லட்சத்து 68 ஆயிரத்தையும் ரம்யாகிருஷ்ணனுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
Read more ...

சமந்தாவுக்கு படங்கள் குவிகிறது

சமந்தாவுக்கு படங்கள் குவிகிறது
சமந்தா தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். இவர் ‘பாணா காத்தாடி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ‘நான் ஈ’ படம் மேலும் பிரபலபடுத்தியது. தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

தற்போது தமிழில் பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. விஜய் ஜோடியாக ‘கத்தி’ படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இதை இயக்குகிறார். சூர்யா ஜோடியாக ‘அஞ்சான்’ படத்தில் நடிக்கிறார். லிங்குசாமி இதை இயக்குகிறார்.

இப்படங்களை தொடர்ந்து விக்ரம் ஜோடி யாகவும் நடிக்கிறார். இந்த படத்தை விஜய் மில்டன் இயக்குகிறார். மேலும், பல படவாய்ப்புகள் குவிகிறது.

விஜய், சூர்யாவுடன் நடிக்கும் படங்கள் ரிலீசானதும் சமந்தா மார்க்கெட் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளார். சமந்தாவின் வளர்ச்சி சக நடிகைகளுக்கு தவிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் மார்க்கெட்டை சரிப்பதாக குமுறுகிறார்கள்.
Read more ...

பட வாய்ப்புகள் குறைந்ததால் நீச்சல் உடைக்கு மாறிய இலியானா

பட வாய்ப்புகள் குறைந்ததால் நீச்சல் உடைக்கு மாறிய இலியானா
தமிழில் ‘கேடி’ விஜய் ஜோடியாக நண்பன் படங்களில் இலியானா நடித்தார். அதன் பிறகு தமிழ் படவாய்ப்புகள் வரவில்லை. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தார் அங்கும் இப்போது படங்கள் இல்லை. ஒரே ஒரு இந்தி படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

ஒன்றரை கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி நம்பர் 1 நடிகை இடத்தை எட்டி பிடிக்கும் நிலையில் இருந்த அவருக்கு எதிர்பாராமல் சரிவு ஏற்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு பட உலகில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. இதனால் மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.

நீச்சல் உடையில் நடிக்கவும் தயாராக இருப்பதாக இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு தூது அனுப்பி உள்ளார். அத்துடன் ஆங்கில பத்திரிகையொன்றுக்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்தும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். அந்த படம் இணைய தளங்களில் பரவி வருகின்றன. 
Read more ...

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிச் செருக்கு

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிச் செருக்கு
பாட்டுக்கோட்டையார் என்றும், பட்டுக்கோட்டையார் என்றும் தமிழர்களால் அன்புடன் நினைவுக் கூரப்படும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஒரு சிறந்த தமிழ் அறிஞராகவும், சிந்தனையாளராகவும், திரைப்பட பாடலாசிரியராகவும் திகழ்ந்தவராவார்.

இவரது பெரும்பாலான பாடல்கள் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தி இயற்றப்பட்டவையாகும். இவருடைய பாடல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், திராவிட இயக்கத்திலும், கம்யூனிச சித்தாந்தத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கவுரவாம்பாள்.

தனது பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டிய இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் கொட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் ஒருசேர சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக வடித்துத் தந்தார்.

இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1955ஆம் ஆண்டு ’படித்த பெண்’ திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி, தமிழ் சினிமா இசைத்துறையில் அழுத்தமான முத்திரையை பட்டுக்கோட்டையார் பதித்தார்.

இளம் வயதிலேயே விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை மக்களின் மனங்களில் பதிய வைப்பதில் சலிக்காது பாடுபட்டார். நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்த பட்டுகோட்டையார், தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பணியாற்றினார்.

கவிஞரை "சுந்தரம்" என்று எல்லோரும் அழைப்பதுண்டு. உதவி என்று யார் அழைத்தாலும், ஓடோடிச் சென்று உதவுவது அவரின் வழக்கம்.அவர் கண் முன்னே யாரும் துன்பப்படுவதை ஏற்றுக்கொள்ள அவரது மனம் என்றுமே சகித்ததில்லை.

அப்படிப்பட்ட மிகப்பெரிய "பொதுநலவாதி"யாக திகழ்ந்த கவிஞர், அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டு சிந்தனையை தூண்டக்கூடிய பாடல்களை பாடினார். கம்பீர குரலில் தாளமிட்டு, பாடியபடி தனது பாடல்களை இயற்றுவது, இவரது தனிச்சிறப்பு. பாடுவதோடு மட்டுமின்றி, பொதுவுடமை கருத்துக்கள் அடங்கிய கதையம்சம் கொண்ட சில நாடகங்களில் இவர் நடித்தும் உள்ளார்.

திரை உலகில் நுழைய பட்டுக்கோட்டையார் சென்னைக்கு வந்து ராயப்பேட்டை பொன்னுசாமி நாயக்கர் தெருவில் 10-ம் நெம்பர் வீட்டில் ஒரு அறையை 10 ரூபாய்க்கு வாடகைக்குப் பிடித்தார். சிறிய அறை. அதில் அவரது நண்பர்களான ஓவியர் கே.என். ராமச்சந்திரனும், நடிகர் ஓ.ஏ.கே.தேவரும் தங்கி இருந்தனர். பட்டுக்கோட்டை துவக்க காலத்தில் பணத்துக்கு கஷ்டப்பட்டாலும் துணிச்சல்காரராகவும் தைரியசாலியாகவும் இருந்தார்.

சினிமா கம்பெனி ஒன்றுக்கு அவர் பாட்டெழுதிக் கொடுத்தார். பணம் வந்து சேரவில்லை. பணத்தைக் கேட்க பட அதிபரிடம் சென்றால், 'பணம் இன்னிக்கு இல்லே! நாளைக்கு வந்து பாருங்கள்' என்று பதில். ஆனால் கல்யாணசுந்தரமோ பணம் இல்லாமல் நகருவதில்லை என்ற உறுதியுடன் நின்றார். 'நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரும்' என்ற பட அதிபர் வீட்டிற்குள் போய்விட்டார்.

உடனே கல்யாணசுந்தரம், சட்டைப்பையில் இருந்த ஒரு தாளையும், பேனாவையும் எடுத்து சில வரிகள் எழுதி, அந்த தயாரிப்பாளரின் மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். கொஞ்ச நேரத்தில் படக்கம்பெனியைச் சேர்ந்த ஆள் பணத்துடன் அலறியடித்துக் கொண்டு கல்யாணசுந்தரத்திடம் வந்து பணத்தைக் கொடுத்தார். அப்படி என்னதான் அந்த சீட்டில் எழுதினார் பட்டுக்கோட்டை? இதோ...

'தாயால் வளர்ந்தேன்; தமிழால் அறிவு பெற்றேன்; நாயே! நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன்; நீ யார் என்னை நில் என்று சொல்ல?'

இதைப் படித்துப் பார்த்த பட அதிபர் அசந்து போனார். பணம் வீடு தேடி பறந்து வந்தது.

இப்படிப்பட்ட தன்மானத்தோடு, கவிச்செருக்கும் ஒருசேர வாழ்ந்து, பகுத்தறிவையும், சுயமரியாதையையும் நமக்கு ஊட்டிய மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் சுமார் 200 திரையிசைப் பாடல்களை வழங்கியுள்ளார்.
இருபத்தொன்பதே வயதிலேயே காலன் அவரை நம்மிடம் இருந்து பிரித்துவிட்டபோதிலும், சின்னப்பயலே... சின்னப்பயலே சேதி கேளடா.., தூங்காதே தம்பி தூங்கதே.., திருடாதே பாப்பா திருடாதே.., சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி.., மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே.., உன்னைக் கண்டு நானாட.., போன்ற இனிய, எளிய, கருத்தாழம் மிக்க பாடல் வரிகளின் மூலம் தமிழர்களின் இதயங்களில் என்றென்றும் நீங்காத சிறப்பிடம் பிடித்துள்ளார்.

பட்டுக்கோட்டையாரின் நினைவைப் போற்றும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு அரசின் சார்பில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டையாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்களும் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

அவரது பிறந்த நாளான இன்று அந்த தமிழ்மகனின் நினைவுகளை நாமும் போற்றி மகிழ்வோம்!

Read more ...

ராதிகா ஆப்தேவிடம் சில்மிஷம் செய்த அஜ்மல்!

Vettriselvan-300x221
தமிழில் அஞ்சாதே, கோ உள்பட பல படங்களில் நடித்தவர் அஜ்மல். இதில் கே.வி.ஆனந்த் இயக்கிய கோ படத்தில் ஜீவா கதாநாயகனாக இருந்தபோதும், அஜ்மலே முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
அதனால் அந்த படத்திற்கு பிறகு தமிழில் அவர் அடுத்த லெவலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அதன்பிறகு அவர் நடித்த கருப்பம்பட்டி வெற்றியாக அமையவில்லை.
இருப்பினும் வெற்றிச்செல்வன், கதிர்வேல், உலா உள்பட சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் வெற்றிச்செல்வன் படத்தில் அஜ்மல்-ராதிகா ஆப்தே இருவரும் ஜோடி சேர்ந்து நடித்து வந்தனர்.
ஆனால் எப்போதோ வெளிவருவதாக இருந்த அப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. என்ன காரணம்? என்று விசாரித்தால், அப்படம் ஒரு பிரச்னையில் சிக்கியிருப்பதாக சொல்கிறார்கள்.
அப்படி என்னதான் பிரச்னை? என்று துருவிப்பார்த்தால், ஒருநாள் அஜ்மல், ராதிகா ஆப்தே சம்பந்தப்பட்ட ஒரு கிளுகிளுப்பு காட்சி படமாக்கப்பட்டதாம்.
அப்போது உணர்ச்சிவசப்பட்ட அஜ்மல் கொஞ்சம் ஓவராகி, ராதிகா ஆப்தேவிடம் சில்மிஷம் செய்துவிட்டாராம். இதனால் டென்சனான ராதிகா ஆப்தே, ஆங்கிலத்தில் அவரை கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டே ஸ்பாட்டை விட்டு வெளியேறி விட்டாராம் .
அதையடுத்து, இப்போதுவரை படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுக்கிறாராம். அஜ்மலுடன் நான் நடிக்க மாட்டேன் என்கிறாராம்.
ஆனால், அவர்கள் இருவரும் நடிக்க வேண்டிய காட்சிகள் இனனும் நிறையவே உள்ளதாம். அதனால், எப்படி அந்த காட்சிகளை முடிப்பது, எப்போது படத்தை வெளியிடுவது என்று அப்படக்குழுவினர் விழி பிதுங்கி நின்று கொண்டிருக்கிறார்களாம்.
Read more ...